புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வீட்டின் மீது நேற்றிரவு கற் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
கற் பிரயோகத்தினால் வீட்டின் யன்னல் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கல்லூரியின் அதிபர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ரஜீப் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.