பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் சிரேஷ்ட தலைவர் தூக்கிலிடப்பட்மையை அடுத்து, பங்களாதேஷில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
அப்துல் காதர் முல்லாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக இடம்பெற்ற போரில், மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் சிரேஷ்ட தலைவரான அப்துல் காதர் மொல்லா நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார்..
இதனையடுத்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் நாளை நாடு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.