Saturday, 14 December 2013

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

Police

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் வாராந்தம் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (13.12.2013கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், 'பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளாக இருந்தாலும் அவற்றிற்கு பொலிஸார் இலஞ்சமாக  பணம் அல்லது ஏதாவது பொருட்களைப் பெற்றுக்கொண்டால் என்னிடம் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்படுகிறது.

அவ்வாறு தெரியப்படுத்தப்படும் பட்சத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இலஞ்சம் கொடுப்பவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.