இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் மற்றும் தென்னாபிரிக்க தூதுவராலயம் என்பன இணைந்து இந்த வழிபாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள வாழும் மீட்பர் பேராலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு பேராயர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்களும், இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.