இதன்காரணமாக காலிமுகத்திடல் சுற்றுவட்டம், ரீகல் சுற்றுவட்டம், சைத்திய வீதி, துறைமுக நுழைவாயில், கான் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டம் மற்றும் ஒல்கோட் மாவத்தை, சினோர் சந்தி என்பவற்றின் ஊடாக கோட்டை வரையுள்ள வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர வங்கி மாவத்தை, ஜனாதிபதி மாவத்தை சந்திகளின் ஊடாக, பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையுள்ள வீதிகளும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.