Saturday, 30 November 2013
புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை
கலைப் பட்டதாரிகளுக்கான புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
தொழில் சந்தையை இலக்காகக்கொண்டு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
அத்துடன் கலைப்பட்டதாரி மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்தையும் கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வருடந்தோறும் சுமார் 3000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய உயர்கல்வி அமைச்சின் செயலாளர், ஆசிரிய தொழிலுக்கு பொருத்தமானவர்களாக அவர்களை மாற்றும் பொருட்டு ஏனைய தொழிற்பயிற்சிகளையும் வழங்குவதற்கு எண்ணியுள்ளதாக தெரிவித்தார்.
இதுதவிர சுற்றுலா, கதிரியக்க, தகவல் தொழில்நுட்பம், கிராம அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.