Friday, 22 November 2013

அப்பிளின் உற்பத்திகளை பிரதி பண்ணியது செம்சுங்


அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் ஆகியவற்றின் வசதிகளை பிரதி பண்ணிய குற்றச்சாட்டுக்காக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு செம்சுங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
செம்சுங் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 26 உற்பத்திகளில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து அப்பிள் நிறுவனம் செம்சுங் நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்தது.
வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி லுசி கோஹ் தலைமையிலான குழுவினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
 
எனினும் தமது உற்பத்திகள் தனித்தன்மை வாய்ந்தவை என்று உறுதிபடத் தெரிவிக்கும் செம்சுங், இது தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
 
அப்பிள், செம்சுங் நிறுவனங்களுக்கிடையிலான முறுகல் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றமையால் போட்டித் தன்மை மிக்க மொபைல் சந்தையில் பாரியதொரு மாற்றம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.