தொலைத்தொடர்பாடல் தீர்வை 5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த தீர்வை அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் குறிப்பிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் 20 வீதமாக காணப்பட்ட தீர்வை, 25 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இணையத்தள மற்றும் புரோட்பேண்ட் சேவைகளுக்கான 10 வீத தீர்வையில் எந்தவித மாற்றமும் ஏற்பட மாட்டாது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ் பெல்பிட்ட தெரிவிக்கின்றார்.