Sunday, 24 November 2013

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வியாளர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை சிறுவர் தினத்தில் புலமை பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியிடப்பட்டதால் பாரிய பிரச்சினை ஏற்பட்டது.

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாட்டின் அடிப்படையில் 30 கல்வியாளர்களிடம் கருத்தறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

அதன் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதிபா மகாநாமஹேவா தெரிவித்தார்.