கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப்
பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் டிசம்பர்
மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார கூறினார்.
பரீட்சைப் பெறுபேறுகளை குறித்த திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு
உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அவசியமான
நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு பரீட்சைகள்
திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஆணையாளர் நாயகத்தினால்
பணிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, 10 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நாடளாவிய
ரீதியில் 2 இலட்சத்து 92 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
இவர்களில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பரீட்சார்த்திகள்
பாடசாலைகளிலிருந்து தோற்றியதுடன், 45 ஆயிரத்து 240 பரீட்சார்த்திகள்
தனிப்பட்ட ரீதியாகத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.