Thursday, 24 October 2013

ஜனாதிபதி கட்டுநாயக்க அதிவேக வீதியைப் பார்வையிட்டார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை கட்டுநாயக்க அதிவேக வீதியைப் பார்வையிடுவதற்காக விஜயம் மேற்கொண்டார்.
கட்டுநாயக்க அதிவேக வீதியில் பிரவேசிக்கும் பேலியகொடை நுழைவாயிலின் ஊடாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் செயற்றிட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.