முஸ்லிம்களுக்கு எதிராக சில பெளத்த அமைப்புகள் அச்சுறுத்தல்களை புரிகின்றனவே இதைப்பற்றி உங்கள் கருத்து என்னவென்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்ட பதிலை அளித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் மத ரீதியிலான மோதல்கள் இடம்பெறுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள பெப்ரிஸ்ட் கிறிஸ்தவ தேவாலயங்களை அங்குள்ள வெள்ளையின மதவாதிகள் சேதப்படுத்தி வருகிறார்கள். அதுபோல் இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இத்தகைய மதவாத வன்முறைகள் இடம்பெறுகின்றன.