Thursday, 24 October 2013

வடமேல் மாகாணத்தில் ஹெலிகொப்டர் சஞ்சாரம் எதற்காக?


வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் சஞ்சரிக்கும் ஹெலிகொப்டர் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.
பிரதேச மக்கள் இந்த ஹெலிகொப்டர் தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் வெளியிடுகின்ற நிலையில் நியுஸ்பெஸ்ட் இன்று அது தொடர்பில் ஆராய்கிறது.
இவ்வாறு ஹெலிகொப்டர் சஞ்சரிப்பது தொடர்பில் நாம் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்திடம் வினவியபோது கனிய வள ஆய்வொன்றுக்காகவே இவ்வாறு செயற்படுவதாக பணியகம் குறிப்பிட்டது.
எனினும் இந்த ஹெலிகொப்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என அவ்விடத்தில் இருந்தவர்களிடம் நாம் வினவ முயற்சி செய்த போதிலும் அவர்கள் அதற்கு பதில் வழங்கவில்லை.