அறிமுகம்
பிரதான துணைப்பாகம்
நோக்கம்
உத்தேச வடக்கு – கிழக்கு (கொழும்பு –
கண்டி) அதிவேகப்பாதை உத்தேச வெளிச் சுற்றுவட்டப் பாதையின் நுழைவாக
இருக்கின்ற மற்றும் தற்பொழுது இருக்கும் கொழும்பு – கண்டி பாதையில் (யு1)
கடவத்தை நகர எல்லையில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அது கட்டுகஸ்தொட்ட –
குரநாகல் - புத்தளம் பாதைக்காக (யூ) ஹேதெனிய பிரதேசத்திலும் கண்டி –
யாழ்ப்பாணப் பாதைக்காக (யு9) கட்டுகஸ்தோட்டையிலும் பிரவேசிக்க
வழியேற்படுத்துகிறது. இந்த அதிவேகப் பாதை 99 கி.மீ. கொண்டுள்ள அதேநேரத்தில்
முதற்கட்டத்தின் கீழ் கடவத்தையிலிருந்து அம்பேபுஸ்ஸவிற்கும் இரண்டாவது
கட்டம் அம்பேபுஸ்ஸவிலிருந்து கட்டுகஸ்தோட்டைக்கும் அமைக்கப்பட
உத்தேசிக்கப்பட்டள்ளது.
உத்தேச பாதையின் நிர்மாணத்தின் முதல் 25
கி.மீ. பகுதி வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் பிரதேசத்தின் ஊடாகச்
செல்லவிருக்கிறது. அப்பிரதேசம் 2010ஆம் ஆண்டு மே மாதம் கடுமையான வெள்ளப்
பாதிப்புக்குள்ளானது. இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இம்முதற்
பகுதியில் தேவையான பிரதேசங்களுக்கு தூண்கள் மீது அமைக்கப்படும் பாதை
முன்மொழியப்பட்டுள்ள அதேநேரத்தில் அதன் ஆரம்ப நீளம் சுமார் 9 கி.மீ. ஆகும்.
பிரதான துணைப்பாகம்
| கட்டம் 1 | - | கடவத்த - அம்பேபுஸ்ஸ |
| நீளம் | - | கி.மீ. 48.2 |
| ஓட்டப்பாதை நிரல்கள் | - | 04 (இன்னும் இரண்டு ஓட்டப்பாதை நிரல்களுக்கான இடவசதியுடன்) |
| இடைப் பரிமாறல் நிலையங்கள் | - | கடவத்தை, கம்பஹா, பலபோவ, அம்பேபுஸ்ஸ |
| உத்தேச ஓட்ட வேகம் | - | மணித்தியாலத்திற்கு கி.மீ. 100 |
| கட்டம் 2 | - | அம்பேபுஸ்ஸ – கட்டுகஸ்தோட்டை |
| நீளம் | - | கி.மீ. 50.7 |
| ஓட்டப்பாதை நிரல்கள் | - | 04 |
| இடைப் பரிமாறல் நிலையங்கள் | - | அம்பேபுஸ்ஸ, தேவாலகம, றம்புகன, ஹத்தரலியத்த, ஹேதெனிய, கட்டுகஸ்தோட்டை |
| உத்தேச ஓட்ட வேகம் | - | மணிக்கு கி.மீ. 80 |
நோக்கம்
- மாற்றுப் பாதையொன்றைத் திறப்பதனால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களில் மலைப் பிரதேசங்களையும் கைத்தொழில் பிரதேசங்களையும் திறந்துவிடல்.
- உத்தேச அதிவேகப்பாதை வலையமைப்புக்குரிய தென்னிலங்கை அதிவேகப்பாதை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை மற்றும் வெளிச் சுற்றுவட்டப் பாதை என்பவற்றுடன் குறித்த பிரதேசங்களை இணைப்பதன் மூலம் அம்மக்களுக்கு நாட்டில் விரைவான போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொடுத்தல்.
- பொருளாதார, கைத்தொழில், விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் என்பவற்றுக்குப் புதிய பிரதேசங்களைச் சேர்ப்பதன் மூலம் நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.
- ஓட்ட வேகத்தை அதிகரித்தல்.
- கொழும்பு – கண்டி பிரதான பாதையில் தற்பொழுது நிலவும் வாகன நெரிசலைக் குறைத்தல்.
சாத்தியக்கூற்று ஆய்வு 2001ஆம் ஆண்டில்
பூர்த்தி செய்யப்பட்டதோடு உத்தேச பாதைக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின்
அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1ஆம் கட்டத்திற்காக அடிப்படை அளவை வேலைகள்
பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு 2ஆம் கட்டத்தின் அடிப்படை அளவை வேலைகளும்
பூர்த்தியடைந்து கொண்டிருக்கின்றன. 1ஆம் கட்டத்தின் 33 கி.மீ. ஆரம்பப்
பணிகளுக்காக ஆரம்பத் திட்டம் பூர்த்திசெய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் விரிவான
பொறியியலாளர் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.