Tuesday, 29 October 2013

உயர்கல்விக்காக பிரித்தானியா சென்ற இலங்கை இளைஞர் கொலை

உயர்கல்விக்காக பிரித்தானியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர், யோக்செயார் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தவீச பீரிஸ் என்ற 25 வயது இளைஞர், செபீல்ட் அலாம் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலாளர் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் தனது படிப்பினை தொடர்ந்த அதே சமயம், பகுதி நேரமாக உணவகமொன்றில் பணியாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற தவீச, சவ்தி கிரசன்ட் (Southey Crescent) பகுதிக்கு தனது கடமை நிமித்தம் சென்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் கத்தியால் பல தடவைகள் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.