Wednesday, 30 October 2013

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வர்ததக பிரிவைச் சேர்ந்த பெண்கள் குழு



பொதுநலவாய மாநாட்டின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வர்ததக பிரிவைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று முதன் முறையாக கலந்துகொள்வதற்கு தயாராக உள்ளது.
இந்த முறை மாநாட்டிற்காக பல புதிய முதலீட்டு திட்டங்களை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
  பொதுநலவாய மாநாட்டின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரநிதிகளின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.
உற்பத்தி மற்றும் கல்வித் துறையை உள்ளிட்ட பல துறைகள் பிரதிநித்துவப்படுத்தி தமது முதலீடுகள் தொடர்பில் மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜானகி குறுப்பு. - தலைவர் பொதுநலவாய மாநாட்டின் பெண்வர்த்கர்களின் தலைமைத்துவ சபை.
"இறுதியாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்வுகளுக்கு அமைய பெண்கள் தொடர்பில் தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கினார்கள். அவர்கள் வர்த்தக உலகில் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து அனுபவங்களைப் பெற்று இலங்கைப் பெண்கள் முன்னோக்கிச் செல்லக்கூடிய திட்டங்களை நிருவாகிகளுக்கு அறிவிக்கும் வகையில் இந்த மாநாட்டில் சமர்ப்பபிப்பதற்கு இந்தக் குழு எதிர்பார்த்துள்ளது"