இதற்கமைய அடுத்த வருடம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் மனித உரிமை பிரதேச அலுவலகங்களை ஸ்தாபிக்கவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே நாட்டின் 10 பிரதேசங்களில் மனித உரிமை ஆணைக்குழு தமது நடமாடும் அலுவலகங்களை திறந்து வைத்துள்ளது.
எனினும் சில மாகாணங்களிலுள்ள முக்கிய நகரங்களில் இதுவரை அலுவலகங்கள் திறக்கப்படாதுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்கள் தமது முறைப்பாடுகளை தடைகள் இன்றி மேற்கொள்வதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்தினதும் பிரதான நகரத்தில் அடுத்த மாதத்திற்குள் நடமாடும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
பின்னர் அந்த அலுவலகங்கள் நிரந்தர அலுவலகங்களாக மாற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய நகரங்களில் விரைவில் மனித உரிமை ஆணைக்குழுவின் நடமாடும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.