Tuesday, 29 October 2013

வாகன விபத்தில் 10 மாணவர்கள் காயம்

கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் 57ஆம் மைல்கல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதில் குறித்த மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6,45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.