இதற்கமைய அநீதி இழைக்கப்படுகின்ற பிள்ளைகள் சார்பில் பெற்றோர் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடமும் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்திற்கு முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை சேர்த்துக் கொள்வது தொடர்பில் அதிபர்களிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக வேறு பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மாணவரொருவருக்கு ஏதெனும் அசாதாரணங்கள் இடம்பெற்றுருப்பின் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அது குறித்து முறைப்பாடுகள் முன்வைக்குமாறு அந்த குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.