Saturday, 26 October 2013

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் பாதுகாபப்பு கடமையில் 220 பொலிஸ்



நாளை திறக்கப்படவுள்ள கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் 220 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
180 போக்குவரத்து பொலிஸாரும், 40 அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அந்த உத்தியோகத்தர்கள் தமக்கான கடமைகளை நாளைமுதல் ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு அதிவேக வீதியில் முன்னெக்கப்பட்ட பாதுகாப்பு கடமைகள் மூலம் விபத்துக்களை கட்டுப்படுத்த முடிந்ததால், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மார்க்கத்திலும் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு பொலிஸார் எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.