Saturday, 26 October 2013

பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் பேசக்கூடிய 2800 பேர் கடமையாற்றுகின்றனர் - அஜித் ரோஹண


இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 2800க்கும் அதிகமான  தமிழ் மொழியை பேசக் கூடிய அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும், இவர்களில் 900 பேர் வடக்கில் கடமையாற்றுவதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி பேசும் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், இன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் பொலிஸ் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு அவர்களின் தாய் மொழியில் விசேடமாக தமிழிழ் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர், சுமார் 1500 தமிழ் பேசக் கூடிய அதிகாரிகளுக்கு  பொலிஸ் திணைக்களத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.