Tuesday, 29 October 2013

எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை

அடுத்த போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலால் 3,300 இற்கும் அதிகமானோர் பீடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நோயின் தாக்கத்தினால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.