Monday, 28 October 2013

அதிசயத்தின் பட்டுக் கம்பளத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்த முடியும் - பொலிஸ்


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியைப் பயன்படுத்தும்போது வீதி ஒழுங்குகளை முறையாக பின்பற்றுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதன் மூலம் விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.
அதிவேக வீதியில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை வேகத்தில் வாகனங்களை செலுத்த முடியும் எனவும் அந்த வேக எல்லையை மீறும் வகையில் வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதிசயத்தின் பட்டுக் கம்பளம் எனப்படும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி இலங்கையின் இரண்டாவது அதிவேக வீதியாகும்.
இந்த அதிவேக வீதி ஜனாதிபதியால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
26 கிலோமீற்றர்  நீளமுடைய இந்த வீதியை பயன்படுத்துவதன் மூலம் கொழும்பிலிருந்து கட்டுநாயக்கவிற்கு 20 நிமிடங்களுக்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.