Wednesday, 23 October 2013

கண்டி - கொழும்பு கடுகதிப் பாதை பறகஹதெனிய ஊடாக


கட்டுநாயக்க கொழும்பு கடுகதிப் பாதையின் வேலைகள் அனைத்தும் நிறைவூற்றுள்ளதுடன் எதிர்வரும் 27அம் திகதி அதனை உத்தியோகபூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படவூள்ளமை குறிப்பிடத்தக்கது. 
அதனுடன் இணைந்ததாக அடுத்த கட்டமாக கண்டி கொழும்பு கடுகதிப் பாதையின் வேலைகளும் துரித கதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பாதை ஆரம்பத்தில் அம்பேபுஸ்ஸ ரம்புக்கனை ஊடாக செல்ல இருந்ததுடன் பின்னர் திட்டம் மாற்றப்பட்டதும் விஷேட அம்சமாகும். 
அந்தவகையில் இக்கடுகதிப் பாதை குருநாகல் வரை வந்து அங்கிருந்து கண்டியை நோக்கி செல்கின்றது. அவ்வாறு குருநாகலிலிருந்து பறகஹதெனிய, பொக்காவலெ,ஹேதெனிய, ஊடாக கண்டியை அடைவதாக குறித்த உத்தியோகபுர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அதாவது பறகஹதெனிய சிங்ஹபுற அதியழுத்த மின்னினைப்புத்தொடரை அண்மித்ததாகவே குறித்த கடுகதிப்பாதை பறகஹதெனியவை குறுக்கிட்டு செல்லப்போவதாகவூம் மேலும் குறித்த தகவல் தெரிவிக்கின்றது. அதாவது சிங்ஹபுற கூட்டுறவூ கடையை குறுக்கிட்டதாக இக்கடுகதிப் பாதை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது
அத்துடன் குறித்த பாதையின் இரு மறுங்கிலும் உள்ளவர்களுக்கு வேறு இடங்கள் (புத்தளத்தில்) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.