Saturday, 12 October 2013

யாழில் இருந்து 1100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள சக்தி வாய்ந்த பைலின் சூறாவளி (Photos)

தாய்லாந்து நாட்டினால் பிரேரிக்கப்பட்ட பைலின் (PHAILIN) எனும் பெயர் சூட்டப்பட்ட சூறாவளியானது மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியாக உருவெடுத்து, இந்தியாவை நோக்கி மிகமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. என இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தைச் சேர்ந்த க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து 1100 கிலோ மீற்றர் தூரத்திலும் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பிரதிப் நகரிலிருந்து தென்கிழக்காக 355 கிலோ மீற்றர் தூரத்திலும் ஒரிசா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோபல்பூர் நகரிலிருந்து தென்கிழக்காக 320 கிலோ மீற்றர் தூரத்திலும் ஆந்திரப் பிரதேசத்தின் கலிங்கபட்டணத்திலிருந்து தென்கிழக்காக 315 கிலோ மீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.
இது ஆந்திர மற்றும் ஒரிசா கரையோர பிரதேசங்களின், கலிங்கபட்டணத்திற்கும் பிரதிப் நகருக்கும் இடையில் கோபலூர் அருகே இன்று (12.10.2013) இந்திய நாட்டை ஊடறுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கைத்தீவிற்கு எந்த நேரடித்தாக்கமும் இல்லை.
சில இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்
யாழ்ப்பாணத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
LATESTA
cycloneA
obtrackA