நவம்பர் மாதம் முதல் ரயில், பேரூந்து கட்டணம் உயர்வு
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ரயில் மற்றும் பேரூந்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க பேரூந்து கட்டண அதிகரிப்பு குறித்து அறிவித்துள்ளார்.
பேரூந்து கட்டணங்களை ஏழு வீத்த்தினால் உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தனியார் பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.இதேவேளை, பேரூந்து கட்டண உயர்வு குறித்து இதுவரையில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.மேலும், ரயில் கட்டணங்களும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளது.

