Monday, 28 October 2013

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 'மெடி சித்த 2013' கண்காட்சி ஆரம்பம்


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்த மருத்துவ கண்காட்சியும், விற்பனை கூடமும் தற்போது திருமலை வளாகத்திலுள்ள கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
“மெடி சித்த 2013” என்ற தொனிப்பொருளில் இன்று காலை 9 மணிக்கு இந்த கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சித்த மருத்துவம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் விஞ்ஞான துறை மாணவர்களுக்கு தெளிவூட்டுவதே இதன் முக்கிய நோக்கமென கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாக முதல்வர் டொக்டர் வர்ணகுலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த கண்காட்சியின் போது சித்த மருத்துவத்துவமானது நவீன மருத்துவ துறைக்கு ஆற்றும் பங்களிப்பு தொடர்பில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வகையிலான தெளிவுப்படுத்தல்களும் இடம்பெற்று வருவதாக திருமலை வளாகத்தின் முதல்வர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறியுள்ளார்.
இந்த சித்த மருத்துவ கண்காட்சிக்கு சக்தி எப்.எம் மற்றும் சக்தி ரீ.வி ஆகியன ஊடக அனுசரனை வழங்குகின்றன.