இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்டன அந்தவகையில் குருநாகல் மாவட்ட போட்டித்தொடர் நேற்று நிறைவூற்றது. குருநாகல் மாவட்டத்தின் 16 கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்ற இப்போட்டித்தொடர் கடந்த 2013 நவம்பர் மாதம் ஆர்மபமானது.
இதன் இறுதிப்போட்டி நேற்று குருநாகல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் பி.ப இடம்பெற்றது. இவ் இறுதிப்போட்டியின் பிரதம அதிதியாக இலங்கை கால்ப்ந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் திரு. ரொட்ரிகோ மற்றும் குருநாகல் மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளனத் தலைவரும் அமைச்சருமான ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் மற்றும் இராணுவ அணியினருக்கு இடையில் இடம்பெற்ற இப்போட்டியில் நடப்பு சம்பியனான இலவன் ஸ்டார்ஸ் அணியினர் ஆரம்பம் தலே தமது ஆதிக்கத்தை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் முதல் 20 நிமிடங்களுக்குள் மொஹமட் பைசல் மற்றும் மொஹமட் சதாம் ஆகியோரின் திறமையினால் இரண்டு கோல்களைப் பெற்றுக்கொண்ட இலவன் ஸ்டார்ஸ் அணியினர் முன்னிலை வகித்தனர்.
போட்டியின் இரண்டாவது பகுதியில் கோல்களைப் பெறத்தக்க ஏராளமான சந்தரப்பங்களை இலவன் ஸ்டார்ஸ் கழகத்தினர் நலுவ விட்டதுடன் இராணுவ அணியினர் ஒரு கோளைப் பெற்றுக்கொண்டனர். போட்டி முடிவின்போது 2-1 எனும் அடிப்படையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும் தமது ஆதிக்கைத்தை நிலைப்படுத்திய பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் 2013-14 குருநாகல் மாவட்ட சம்பியன்களாக தெரிவூசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் கழகத்தின் மொஹமட் பைசல் 19 வயதின் கீழ் இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு தெரிவூசெய்யப்பட்டதுடன் பெப்ரவரி மாதம் இடம்பெறவூள்ள வெளிநாட்டு போட்தெ;தொடரிற்கு பங்ககொள்ளும் வாய்பபைப் பெற்றுக்கொண்டதுடன் மொஹமட் சதாம் இலங்கை கால்பந்தாட்ட பயிற்சி அணியில் இடம்பெறுவதற்கான வரத்தையூம் பெற்றுக்கொண்டமை இங்கு விஷேட இம்சமாகும்.