Wednesday, 18 December 2013

காலாவதியான மிளகாய் தூள் வத்தளை பகுதியில் கண்டுபிடிப்பு

காலாவதியான மிளகாய் தூள் வத்தளை பகுதியில் கண்டுபிடிப்புவத்தளை – மாபொல பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத ஒரு தொகை மிளகாய் தூள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்யும் நோக்கில் இந்த காலவதியான மிளகாய் தூளை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாக, நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா அலுவலகத்தின் மாவட்ட பிரதானி ரஞ்ஜித் வீரவர்த்ன தெரிவித்தார்.
பாவனைக்கு உதவாத 8 ஆயிரம் கிலோகிராம் மிளகாய் தூள் நுகர்வோர் கைப்பற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்
இந்த சம்பவம் தொடர்பில் களஞ்சியசாலையின் பொறுப்பாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.