பண்டிகை காலத்தில் பயணிகளின் நலன்கருதி கால அட்டவணைக்கு புறம்பாகவும் தூரப் பிரதேசங்களுக்கான பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் கூடுதல் கட்டணம் அறவிடும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உரிய பஸ் கட்டணங்களை விட அதிகமாக பணத்தை அறவிடும் நடத்துநர்கள் தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் ஆணைக்குழுவின் தலைவர் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூரப் பிரதேச பஸ் சேவைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.