Saturday, 9 November 2013

சவுதியிலிருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் 400 இலங்கையர்கள்


சவுதி அரேபியாவின் தமாம் பகுதியில் 400க்கும் அதிகமான இலங்கைப் பணியாளர்கள் குடிவரவு/குடியகல்வு அலுவலகம் முன்பாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் எதிர்ப்பார்ப்புடன் கடந்த பத்து நாட்களாக அந்த இடத்தில் தங்கியிருப்பதாக அவர்கள் நியூஸ்பெஸ்டுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
சவுதி அரேபிய அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட போது மன்னிப்புக் காலத்தினுள் தம்மால் நாடு திரும்ப முடியவில்லை எனவும் இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் தமாமில் தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனியவிடடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு அமைவாக இலங்கையர்களை நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.