Saturday, 26 October 2013

தமிழ் பெண்ணை மணம் முடிக்க இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் இளைஞர் (Photos)


மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை மணம் முடிப்பதற்காக முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்து மதத்திற்கு மாறியதுடன் இந்துமத முறைப்படி திருமணமும் செய்துகொண்டுள்ளார்.
தோப்பூர் அல்லை நகர்-05 ஐ சேர்ந்த முகமது றியாஸ்தீன் முகமது இப்ஹான் என்ற முஸ்லிம் இளைஞருக்கும் கரடியனாறு கொலனியைச் சேர்ந்த ஞானச்செல்வம் வேவிசரளா என்ற பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட காதல் காரணமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு சம்மதித்து இன்று செங்கலடி ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இந்துமத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
குறித்த முஸ்லிம் இளைஞர் மேற்படி பெண்னை திருமணம் செய்வதற்காக இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை கிசாந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார்.
இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் அவர்கள் இந்துமத முறைப்படி தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் செய்துவைத்தார்.
DSC_0367DSC_0396




DSC_0420