Sunday, 27 October 2013

வர்ணப் பூச்சுகளில் அடங்கியுள்ள ஈயத்தின் அளவை பரிசோதிக்க நடவடிக்கை

வர்ணப் பூச்சுகளில் அடங்கியுள்ள ஈயத்தின் அளவை பரிசோதிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையிலுள்ள 15 வர்ணப் பூச்சுக்களின் மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் 80 வகையான வர்ணப் பூச்சுக்களின் மாதிரிகளை சந்தையில் இருந்து பெற்றுக்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை திட்டமிட்டுள்ளது.