Sunday, 27 October 2013

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதாக இந்திய அறிவிப்பு


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் தம் பங்குபற்றுவதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மன் குர்ஷித் உறுதிபடுத்தியுள்ளார்.
பொது நலவாய மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் எனவும் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் பங்கேற்கக் கூடாது எனவும் தெரிவித்து அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையிழல் தொலைகாட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தாம் கலந்துகொள்ளவுள்ளதாக சல்மன் குர்ஷித் தெரிவித்ததாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தியா சார்பில் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஏனைய தலைவர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இலங்கையுடன் தொடர்புகளை பேணாது மீனவர் பிரச்சினை போன்ற விடயங்களில் எவ்வாறு தீர்வுகாண முடியும் எனவும் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.