Monday, 28 October 2013

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் பஸ் சேவை ஆரம்பம்

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று தொடக்கம் 13 சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவர் எல்.எ.விமலரத்ன தெரிவித்துள்ளார்.
அதிவேக வீதியில் நாளாந்தம்  26 பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன
கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடம், கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து பஸ் சேவைகளை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை  நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பஸ்களில் கொழும்பிலிருந்து  - கட்டுநாயக்கவுக்கு செல்வதற்கு 130 ரூபா கட்டணமும், கொழும்பிலிருந்து  - நீர்கொழும்புக்கு 150 ரூபா கட்டணமும் அறவிடப்படவுள்ளன.
எதிர்காலத்தில் கொழும்பு மற்றும் ஜா-எலவுக்கு இடையிலும் பஸ் சேவையொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாகவும்,  கட்டணமாக 100 ரூபாவை அறவிடவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிடுகின்றது.