Saturday, 24 May 2014

பரகஹதெனிய கிராமத்தின் வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்தல்

குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய நூலுக்கு தகவல்களைச் சேகரித்தல்

மேற்படி விடயமாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியற்துரை பேராசிரியர் M.S.M.அனஸ் அவர்கள் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் .

குருநாகல் மாவட்டத்தில் எமது கிராமமான பரகஹதெனிய இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி சர்வ தேசத்திலும் மிகப் மிகப் பிரபல்யமான ஒரு கிராமமாகும் .

எனவே,  பரகஹதெனிய கிராமத்தின் வரலாறு தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள்  / ஆவணங்கள் , குறிப்புக்கள் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .

தொடர்புகளுக்கு : ஆசிரியர் M.S.M.அப்துல் பாரி
                                      தொ . 0727282871

                                      பரகஹதெனிய ஐக்கிய நாசா அமைப்பு 
                                      தொ. 0771882121 , 0771166911 , 0777212299

Thursday, 17 April 2014

யுவனை தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்?


யுவனை தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்?இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளதாக இந்திய இணையத்தளங்கள் பலவற்றில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்தினை தழுவியதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். பின்னர் அதனை அவர் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ஜெய் தரப்பில் இருந்து இது தொடர்பான அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஜெய் தற்போது நஸ்ரியாவுடன் இணைந்து நடித்துள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கதை அமைந்துள்ளது.

Saturday, 8 March 2014

குருநாகல் BBS கிளையினால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்ஸ்


அண்மையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீரகத்தில் சதக்குப்பை எனப்படும் மூலிகை கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதனை மையமாக வைத்து பொது பல சேனா  குருநாகல் கிளை மூலம் 

""பாகிஸ்தான் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அனுப்பியுள்ள சீரகத்தை சாப்பிட்டால் சிங்கள இனம் அழிந்துவிடும்.  இதற்குப் பிறகாவது சிங்களவர்கள் விழிப்பாக இருங்கள். - குருநாகல் பொதுபல சேனா""

என பிரசுரிக்கப்பட்ட போஸ்டர்களை நேற்று இரவு  பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
              
               






சவுதியில் கலாநிதி பட்டம் பெற்ற பறகஹதெனிய மைந்தன்

குருநாகல் பறகஹதெனியைச் சேர்ந்த அஷ்ஷெய்க் M.R.M. அம்ஜத் ராஸிக் (ஸலபி) அவர்கள் 27.02.2014 வியாழக்கிழமை அன்று சவுதி அரேபியாவின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி கற்கையை நிறைவு செய்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

அன்றைய தினம் காலை 8.30 முதல் 11.30 மணி வரை இடம் பெற்ற இவரது ஆய்வு நூலின் மீதான விவாதத்தின் பெறுபேறாக “முதல் தரம்” என்ற உயர் பெறுபேற்றினை இவரது ஆய்வு பெற்றுக் கொண்டது. அத்துடன் உலக மக்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக அதை அச்சிட்டு விநியோகிக்க வேண்டும் என விவாதக் குழு சிபாரிசு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விவாதக் குழு உறுப்பினர்களாக மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அனீஸ் இப்னு அஹ்மத் தாஹிர் ஜமால் மற்றும் தம்மாம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி ஆதில் இப்னு ஹஸன் அலி அல் பரஜ் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாய்வு நூலின் மேற்பார்வையாளராக மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பத்ர் இப்னு முஹம்மத் அல் அம்மாஷ் இடம் பெற்றார்.

மேலும் பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் ஆலிம் கற்கைநெறியை முடித்த M.R.M. அம்ஜத் ராஸிக் (ஸலபி) அவர்கள் தனது கலைமானி மற்றும் முதுமானி கற்கைநெறிகளையும் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதல் தரத்தில் பெறுபேற்றினைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இவரே சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களிலேயே முதலாவதாக கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர் என்பது விஷேட அம்சமாகும்.






Tuesday, 18 February 2014

அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டம் - 2014

பெற்றார் , பழைய மாணவர் ,நலன் விரும்பிகள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்

நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டம் - 2014



கல்வி அமைச்சின் 07/2013 இலக்க சுற்றரிக்கையின் படி பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வேண்டி உள்ளது .
இதற்கான பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.02.21 ஆம்
திகதி வெள்ளிக் கிழமை பி .ப .3.00 மணிக்கு பாடசாலைபிரதான மண்டபத்தில்
பாடசாலையின் அதிபர் ஜனாப்  ஐ .அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெறும். பாடசாலைநலனில் அக்கறையுள்ள சகலரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

Monday, 20 January 2014

பரகஹதெனிய பள்ளி வாயல் எதிரே மோதுண்ட பிக்கு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதுண்ட பெளத்த பிக்குவின் முச்சக்கர வண்டி 

பரகஹதெனிய பெரிய பள்ளி வாயல் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பெளத்த பிக்கு ஒருவருடன் வந்த முச்சக்கர வண்டி ஒன்று( MONDAY 20-01-2014) மோதுண்டுள்ளது. 

கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி பரகஹதெனிய பெரிய பள்ளி வாயல் எதிரே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KDH வண்டியொன்றில் குறித்த முச்சக்கர மோதுண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெளத்த பிக்கு மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்

அங்கிருந்து அம்பியுலன்ஸ் வண்டி மூலம் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மோதுண்ட இருவரையும் உடனடியாக மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு பெரிய பள்ளிவாயலின் மெளலவி அவர்களே எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.