Saturday, 18 January 2014

பரகஹதெனிய பள்ளிவாயல் அமைதிப் பதாகை இனம் தெரியாதோரால் தீ வைப்பு (Video & Photo)

பள்ளிவாயல் அமைதிப் பதாகை இனம் தெரியாதோரால் தீ வைப்பு 
பரகஹதெனிய பள்ளிவாயல்கள் அருகிலுள்ள அமைதிப் பதாகை நேற்று 19-01-2014 ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12.45 மணியளவில் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது அத்துடன் அருகிலிருந்த திரான்ஷ்போமருக்கும் தீப்பற்றியுள்ளது. 

இச்சம்பவத்தின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் இருப்பதாக தெரியவருகின்றது.

ஏனெனில் பரகஹதெனியவில் கடந்த இரு வாரங்களாக திருடர்கள் தொல்லை தலைவிரித்தாடியதும் இன்று திருடர்களில் ஒருவன் அகப்பட்டு ஒரு சில நிமிடங்களுக்குள் எவரும் அறிவிக்காமலேயே பொலிசார் அவ்விடத்துக்கு வந்ததும் உடனடியாக பொலிசார் திருடனை வாகனத்தில் ஏற்றியதும் திருடன் நாவால் மக்களுக்கு நக்கலாக சைக்கினை செய்ததும் அதற்கு ஒரு மணித்தியாலத்துக்குள் இனம் தெரியாத இருவர் NW VP 6271 எனும் மோட்டார் சைக்கிளில் இருக்கும்போது சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் விசாரித்தபோது தீவிரமாக வாக்குவாதப்பட்டதும் உடனடியாக வேஉட விகாரையின் பிக்கு வந்து குறித்த இருவரையும் விடுவித்துச் சென்று 5 நிமிடங்களுக்குள் ஒரே நேரத்தில் இரு பள்ளிவாயல்களுக்கும் அருகிலுள்ள அமைதிப்பதாகை மீது டயர் போட்டு மூட்டபட்டிருந்தமை சந்தேகத்தை மென்மேலும் தூண்டிவிடுகின்ற விடயமாகவே இருக்கின்றது 

வழமையாக பள்ளிவாயல் சேவையில் இருக்கும் போக்குவரத்துப் பொலிசார் இன்று நேரகாலத்துடன் அவ்விடத்திலிருந்து விடைபெற்று சென்றதும், தொடர்ச்சியான திருடர்கள் தொல்லையும் இந்த தீ மூட்டலும் ஒரே சதித்திட்டமாக இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.

அத்துடன் திருடர்களை பிடித்த உடனேயே பொலிசார் இடத்துக்கு விரைந்து வந்து திருடனை மீட்டுச் சென்றதும் பின்னணி ஆதரவை சுட்டிக்காட்டுகின்றது மேலும் திருடனின் நாவுச் சைகை அதனை உறுதிப்படுத்துகின்றது. 

 அதுமட்டுமன்றி மோட்டார் சைக்கிளில் பிடிபட்ட இருவரும் வெல்லவையை சேர்ந்தவர்கள் என அவர்களின் வாயாலே தெரிவித்ததும் சதித் திட்டம் என்பதை உறுதிப்படுத்துவதுடன் அவ்விருவரின் இனபெரித்தனமான வாக்குவாதப் பேச்சு பின்னணியின் பலத்தை எடுத்துக் காட்டுகின்றது.  அவ்விருவரையும் உடனடியாக பிக்கு வந்து மீட்டுச் சென்ற அடுத்த கணம் பதாகை எரியூட்டப்பட்டமை மொத்த திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

எது எவ்வாறிருப்பினும் இளைஞர்களின் துரித செயற்பாட்டால், ஏற்பட இருந்த பாரிய சேதம் transformaril சிறிய சேதத்துடன் தடுக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது இல்லாவிட்டால் முழு ஊரும் இருளில் மூழ்க வாய்ப்பிருந்தது. 

பதாகை சம்பந்தமான வழக்கு குருநாகல் உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது இவ்வாறான வன்முறை இடம்பெற்றமை இனவெறியின் உச்சநிலையை சுட்டிக்காட்டுகின்றது. 

இதற்குரிய நடவடிக்கை, சட்ட நடவடிக்கைகள் என்ன பொலிசார் செய்யும் வேலி பயிரை மேயும் செயற்பாடு எங்குபோய் நிற்கும் என்பது கேள்விக்குரியாகின்றது... குறித்த இனவெறி பிடித்த பிக்குவின் செயற்பாடுகளை நிறுத்த எமது நகர்வு எப்படிப்பட்டதாக இருத்தல் வேண்டும்? முழு இலங்கை முஸ்லிம்களும் விழிப்புடன்.....