காத்தான்குடி
நகர சபைக்குட்பட்ட ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களில்
நாளை முதல் சிகரட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பிரிவை எதிர்காலத்தில் சிகரட் பாவனையற்ற ஒரு பிரதேசமாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு முன்னோடியாகவே சிகரட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் கூறியுள்ளார்.
அத்துடன் காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களில் கைத்துடைப்பதற்கு அச்சிடப்பட்ட கடதாசிகள் விநியோகிக்கப்படக்கூடாது எனவும், அதற்கு பதிலாக வெள்ளைக் கடதாசி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.