Saturday, 16 November 2013

தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பொதுபல சேனா நேற்று நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டது

gdfgநேற்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகக்தில் இடம் பெற்ற முறுகல் நிலையினால் பொதுபல சேனாவின் செயலாளர் தாக்கப்பட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கண்காட்சியை எதிர்த்தே இவ்வார்ப்பாட்டத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.பொதுபலசேனாவினால் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட விரோத நடவடிக்கைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாக மேல்மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.


மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது நேற்று 12 மணியளவில் அரசாங்கத்தின் கூலிப்படையாகச் செயற்படும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் இன்னும் சில பிக்குகளும் சிறிகொதவிற்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்தவர்கள் அவர்களைத் தடுத்தனர்.அங்கிருந்த ஏனைய பிக்குகளும் இவர்களை வெளியேறுமாறு கேட்டனர்.அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது அத்துமீறி நுழையவே முற்பட்டனர்.பின்னர் நினைத்ததைவிட எதிர்ப்புப் பலமானது.ஞானசார தேரருக்கு பலமான ஏச்சுகள் விழுந்தன.

தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பொதுபல சேனா நேற்று நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டது எனக் கூறினார்.

இது அரசாங்கத்தின் வேலையாகும் என ஐ.தே.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.