Thursday, 28 November 2013

செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பிய சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில்-(படங்கள் இணைப்பு)




காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும் ääசிரேஷ்ட ஊடகவியலாளரும் ääசமுர்த்தி உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். நூர்தீன் நேற்று புதன்கிழமை மாலை சுமார் 6.10 மணியளவில் செய்தி சேகரித்துவிட்டு மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடியிலுள்ள அவரின் வீட்டை  நோக்கி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் வைத்து மாடுகள் வீதியைக் குறுக்கறுத்ததன் காரணமாக விபத்துக்குள்ளானார்.


விபத்துக்குள்ளான இவர் காத்தான்குடி வைத்தியசாலையில் அவசர சிகிச்சையை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 09ஆம் விடுதியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்தால் அவரது தோள்பட்டையில் இரண்டு இடங்களில் எலும்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கும் அதேவேளை முகம் உள்ளிட்ட உடம்பின் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் முன்பகுதி பற்களும் உடைந்து சேதமடைந்துள்ளது.

ஊடகவியலாளர் நூர்தீன் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு ஊடகவியலாளர்கள்ääகிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்ääஸ்ரீ.ல.மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா ääமட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜியார் உட்பட  அரசியல் பிரமுகர்கள்ääசமுர்த்தி உத்தியோகத்தர்கள்ää மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்ததை காணமுடிந்தது
அவர் பூரணமாக சுகமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் ஊடகவியலாளர் மௌலவி எஸ்எம்.எம்.முஸ்தபா (பலாஹி) வேண்டுகோள் விடுத்துள்ளார்.