கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டடமொன்றில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று முற்பகல் 11.15 அளவில் இடம்பெற்றுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
புனரமைப்பு நடவடிக்கைகளின் பொருட்டு மாநாட்டு மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட மண்டபத்திலேயே தீ பரவியிருந்தது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அண்மையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றபோது, ஊடக மத்திய நிலையமாக இயங்கிய கட்டடமே தீயினால் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, இந்த தீ விபத்திற்கான காரணத்தை கண்டறியும்பொருட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.