தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி இன்று வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவனெல்லை நகரில் இடம்பெறும் இந்த போராட்டத்தில் எட்டு பிக்குகள் இந்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரயே அமித்த தம்ம, மாகல்கந்தே சுதத்த, ரத்னபுரே நந்தாலோக, மெதிரிகிரியே புண்யாஸார, அம்பத்தலாவே சங்கரத்ன, சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த, திரியாயே சீலரதன மற்றும் மெதிரிகிரியே சுதத்த ஆகிய தேரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தெவனகல புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாத்து தரக் கோரியும் புனித பிரதேசத்துக்கு உட்பட்ட இடங்களில் உள்ள முஸ்லிம்களை வெளியேறக் கோரியும் கூடியிருந்த பொதுமக்கள் கோசங்களை எழுப்பினர்.எனினும் இந்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.