மட்டக்களப்பு காத்தான்குடியில் இயங்கி வரும் கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலையின் 2013 ஆம்
ஆண்டிற்கான விசேட தேவையுடையோரின் ஆக்கத் திறன் கண்காட்சியும் விற்பனையும்
நேற்று வியாழக்கிழமை (24.10.2013) காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“விசேட தேவையுடையோரை சமூகத்துடன் இணைந்து வாழ தயார்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் 03 நாள் கொண்ட இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் முகாமையாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில், செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.பஷீர் (மதனி), காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப், காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எஸ்.எம்.சுபைர், கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் உறுப்பினரும் ஊடகவியலாளருமான ஆசிரியர் முஸ்தபா (பலாஹி), அமைப்பின் உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான டீ.எல்.ஜௌபர்கான், மற்றும் பிரமுகள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை காலை 08.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை பாடசாலை மாணவர்களும் பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை பெரியவர்களும் பார்வையிட முடியும் என கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.பஷீர் (மதனி) தெரிவித்தார்.