Sunday, 20 October 2013

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியை பார்வையிட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்






கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை பொது மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இத்தினங்களில் மத அனுஷ்டானங்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினூடாக பயணிப்பதற்கான கட்டணங்கள் தொடர்பான சுற்று நிருபம் விரைவில் அமைச்சினால் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அதிவேகப் பாதையினூடாகச் செல்லும் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் அறிவிக்கப்படுமெனவும் இப் பாதையினூடாக பயணிப்பதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பாக வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் அமைச்சினால் அறிவூட்டப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 20 நிமிட நேர இடைவேளையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லக் கூடிய இவ்வதிவேகப் பாதையினூடாக தினமும் 15 ஆயிரம் வானங்கள் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.