புலமைப்பரிசில் பரீட்சை மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

தரம்
5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்ய
விரும்புவோர் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.
மீளாய்வுப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முறைப்படி பூரணப்படுத்
தப்பட்ட விண்ணப்பத்தை பாடசாலை அதிபருக்கூடாக அனுப்பி வைக்க வேண்டுமெனவும்
அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்டன.வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 32
ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கல்வியமைச்சர்
தெரிவித்தார்.